மணப்பாறையில் சுவர் இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மணப்பாறையில் சுவர் இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு-முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மணப்பாறையில் சுவர் இடிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
4 லட்சம் இழப்பீடு
திருச்சி, மணப்பாறை, தொப்பம்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக இன்று அதிகாலை தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி செல்வகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *