காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் :

காஷ்மீரில் உள்ள புல்வாலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து புல்வாலா பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உடனடியாக விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.வெகுநேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு டிகேன் என்னும் இடத்தில் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இரு தரப்பினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை எனவும்,இது குறித்த தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்று பாதுகாப்பு படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *