விஜய்சேதுபதியுடன் இணைந்து மாளவிகா மோகனன் மீண்டும் நடிக்க உள்ளார்.

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.
விஜய் சேதுபதி ஒரு பக்கம் ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’ என படங்களில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஓடிடி, வெப் சீரிஸ், ஆந்தாலஜி படங்கள் என இந்த பக்கமும் களம் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது முன்னணி ஓடிடி தளத்தின் வெப் சீரிஸ்ஸில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளாராம். அவருடன் மாளவிகா மோகனனும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
READ MORE- ‘மாஸ்டர்’ரில் ஆண்ட்ரியாவின் ரோல் என்ன? போஸ்டர் கொடுத்த ஹிண்ட்!
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மாளவிகா தனுஷூடன் ‘டி 43’ல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியுடன் தற்போது இணைந்துள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.




