சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது குறித்து தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறியதாவது :
2019-20 ம் ஆண்டு வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நீண்டநாள் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் துணை முதல்வர் அறிவித்து இருந்தார். நிவாரண பணிகளுக்காக ஏற்கனவே 50 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் மீதம் இருந்த ரூ.188 கோடி திரும்ப ஒப்பளிப்பு செய்யப்பட்டது.
Read more – தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருது : அஜித், தனுஷ்,ஜோதிகா தேர்வு
இந்தநிலையில் அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எழுதிய கடிதத்தில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.160 கோடியை மீண்டும் தர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.அவரது கோரிக்கையை அரசு பரிசீலித்து ரூ.111 கோடி தொகையை திரும்பி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அனுமதி தெரிவித்துள்ளது.