பணிப் பெண்ணுக்கு உணவாக 3.67 லட்சம் மதிப்புள்ள டிப்ஸ் : மனிதநேயம் கொண்ட வாடிக்கையாளர்

பணிப் பெண்ணுக்கு உணவாக 3.67 லட்சம் மதிப்புள்ள டிப்ஸ் : மனிதநேயம் கொண்ட வாடிக்கையாளர்

பணிப் பெண்ணுக்கு உணவாக 3.67 லட்சம் மதிப்புள்ள டிப்ஸ் வழங்கிய மனிதநேயம் கொண்ட வாடிக்கையாளரின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்த கியானா டி ஏஞ்சலோ எனும் பணிப்பெண்ணுக்கு தான் இந்த மாபெரும் மனிதாபிமானம் மிகுந்த டிப்ஸ் கிடைத்துள்ளது. உலகில் ஆங்காங்கே மனிதநேயம் வெளிப்படுவதால் தான் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். சில நிகழ்வுகளை நேரிலேயே கண்டிருப்போம். அப்படி ஒரு மனிதநேயம் மிக்க சம்பவம் தான் பென்சில்வேனியாவில் நடந்துள்ளது.ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிட வந்த நபர் ஒருவர் 5000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 3.67 லட்சம் டிப்ஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பென்சில்வேனியாவின் பாக்ஸ்டன் எனும் டவுனில் அமைந்திருக்கும் அந்தோணிஸ் எனும் உணவகத்தில் பணிபுரிந்து வருபவர் கியானா டி ஏஞ்சலோ. இவர் எப்போதும் போல ஒரு டேபிளில் உணவருந்த வந்த நபருக்கு உணவு பரிமாறி தனது வேலையை செய்து வந்தார். சாப்பிட்டு முடித்த பிறகு, உணவு பரிமாறியவருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், ஒரு நபர், கியானாவிற்கு $5000 டிப்ஸ் கொடுத்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

Read more – ஹால் டிக்கெட்டில் தாய் என சன்னி லியோன் பெயர் : கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி

இந்திய மதிப்பில் இது 3.67 லட்சம் ஆகும். அனைவரையும் ஆச்சரியப்படுத்திய அந்த நபரின் மனிதநேயத்தை பாராட்டி. உணவாக உரிமையாளர் அந்த டிப்ஸ் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *