இனி தட்கல் மூலம் சிலிண்டர் புக்கிங்.. அடுத்த 30 நிமிடத்தில் உங்கள் வீடுகளில்.. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

இனி தட்கல் மூலம் சிலிண்டர் புக்கிங்.. அடுத்த 30 நிமிடத்தில் உங்கள் வீடுகளில்.. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புக்கிங் செய்த உடனே சிலிண்டர் 30 நிமிடத்தில் வீடுகளில் வந்தடையும் புதிய திட்டத்தை அமல் படுத்துகிறது.

புதுடெல்லி:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புக்கிங் செய்த உடனே சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய திட்டமானது முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் நாடுமுழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை 1.36 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே காஸ் ஏஜென்சிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று அல்லது 2 சிலிண்டர்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் காலியான சிலிண்டர்களை திரும்ப அளித்த பிறகே புதிய சிலிண்டரை பெறமுடியும்.

Read more – திருவனந்தபுரம் மலபார் எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்தது : பாதுகாப்பு செயின் இழுத்து தப்பித்த பயணிகள்

இந்தநிலையில், பிப்ரவரி 1 ம் தேதி முதல் புதிய சிலிண்டர் புக்கிங் செய்தவுடனே அடுத்த சிலிண்டரை டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்தவுள்ளனர். இந்த முறையில், வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும். ’தட்கல் எல்பிஜி சேவா’ மூலம் வெறும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *