இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

கடந்த சில நாட்களாக சரிவை கண்ட தங்கம் விலை தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 9 உயர்ந்து ரூ. 4,622 ஆக உள்ளது. இதன் நேற்றைய விலை ரூ. 4,613 ஆகும். அதேபோல 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 72 ஆக உயர்ந்து ரூ. 36,976க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தை போலவே, வெள்ளியும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ. 70.60க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 70,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




