பரபரப்பான கட்டத்தில் மூன்றாவது டெஸ்ட் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!!

பரபரப்பான கட்டத்தில் மூன்றாவது டெஸ்ட் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!!
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்டூவர்ட் பிராடு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்க்ஸில் அந்த அணி 172 ரன்கள் பின்தங்கியது. இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. ஸ்டூவர்ட் பிராடு பேட்டிங்கில் அசத்தியதோடு, பந்துவீச்சிலும் 6 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ரன்களை குவிந்திருந்தது. இதைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியைவிட 232 ரன்களை பின்தங்கியிருந்தது.

 மூன்றாம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குள் மீதியிருந்த 4 விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 197 ரன்களை மட்டும் எடுத்துள்ளதால், இங்கிலாந்து அணியைவிட 172 ரன்கள் பின்தங்கியுள்ளது.

வளமான முன்னிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *