Wednesday, September 30, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

யானைகள் வாழ்ந்தால் காடும் வாழும் – தும்பிக்கை குழந்தை

saravanan by saravanan
January 25, 2021 5:17 PM GMT+5:30 - Updated on January 26, 2021 10:37 PM GMT+5:30

தற்போது உலகில் வாழும் உயிரினங்களிலேயே பெரிய உயிரினம் என்றால் அது யானை தான். யானைகள் எண்ணிக்கையில் எவ்வளவு இருந்தாலும், ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என இரண்டே வகை யானைகள் தான் உள்ளன. யானைகளினால் வனங்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்படும் நன்மைகள் ஏராளம். யானைகள் சராரியாக ஒரு நாளைக்கு 140 முதல் 240 கிலோ வரை உணவை உட்கொள்ளும். இதனால், ஒரு நாளில் 16 மணி நேரத்தை உணவிற்காக மட்டுமே செலவழிக்கும்.

உணவைத் தேடி தினமும் அதிக தொலைவு பயணிக்கும். அவ்வளவு பெரிய உருவம் காட்டிற்குள் வெல்லும் போதும், மரக்கிளைகளை உடைத்து உண்ணும் போதும், மற்ற விலங்குகள் செல்வதற்கான வழிகள் உருவாக்கப்படுகின்றன. அதிக தொலைவு பயணித்து செல்லும் இடங்களில் எல்லாம் தன் கழிவுகளின் மூலம் விதைகளையும் பரப்புகிறது. இப்படி மறைமுகமாக வனங்களின் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்து வருவதால், யானைகள் வாழ்ந்தால் காடும் வாழும் என்கிறார்கள்.

தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆற்றில் சிக்கிய யானை.. காப்பாற்ற சென்ற படகு கவிழ்ந்து பத்திரிக்கையாளர் பலியான சோகம்!!

தமிழகத்தில் இனி யாரும் இதை வைத்திருக்க தடை விதிப்பு!

அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் யானையும் சேர்ந்துள்ளது. வனங்களில் உணவு கிடைக்காமல் மடிவது, காடுகளில் மனிதர்கள் போட்டுச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு வயிறு வீங்கி இறப்பது, ரயிலில் அடிபட்டு சாவது, மின் வேலிகளில் சிக்கி உயிரை விடுவது என பல காரணங்களால், ஆண்டுக்கு 200 முதல் 300 யானைகள் வரை இறக்கின்றன.  

இயற்கை இறப்பு மட்டுமல்லாமல் இப்படி கொலைகளும் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. வெடிமருந்தை சாப்பிட கொடுத்து வெடிக்க வைத்து கொலை செய்வதையும், தீயிட்டு கொழுத்தி கொலை செய்வதையும் பார்க்கும் போதும், மனிதம் எங்கே? என்று தேட வைக்கிறது. இப்படி யானைகளை துன்புறுத்துவதற்கு  என்ன காரணம் என்று ஆராய்ந்தால், நமக்கு பதிலாக கிடைப்பது ஒன்று தான். மனிதர்கள் வாழும் பகுதிக்கு யானைகள் வந்து விடுகிறது என்பது தான் அது. மனிதர்கள் வாழும் இடத்திற்கு யானை வந்ததா? இல்லை யானைகளின் இடத்திற்கு மனிதர்கள் சென்று விட்டோமா?

வனங்களில் வறட்சி நிலவும் போது, யானைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து செல்லும். அதற்காக எப்போதும் ஒரே பாதையைத் தான் பயன்படுத்தும். இந்த பாதையை தான் ’வலசை பாதை’ என்பார்கள். நாடு முழுவதும் காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் 166 வலசை பாதைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 88 பாதைகள் மட்டுமே உள்ளன. மற்றவற்றை மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டோம். ஆக, வழக்கமான பாதைகளில் வரும் யானைகள் பாதை இல்லாததைப் பார்த்து கோபப்படுகிறது. இப்போது கூறுங்கள், நாம் யானைகளின் இடத்திற்கு சென்றுள்ளோமா? இல்லை யானைகள் நம் இடத்திற்கு வந்துள்ளதா?  

ஏற்கனவே, தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டது போக, மீதமுள்ள யானைகளையும் இப்படி துன்புறுத்திக் கொன்று கொண்டு இருக்கிறோம். இவ்வாறான மனிதத் தன்மையற்ற செயல்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். யானைகள் இருக்கும் வரை தான் காடுகள் செழிக்கும். காடுகள் இருக்கும்வரைதான் மழைபொழியும் நமக்கு தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் இருக்கும் வரைதான் மனிதன் வாழ்வான். ஒரு யானையின் அழிவு, ஒரு காட்டின் அழிவு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரசிகர் திருமணத்தை நடத்திய சூர்யா…வைரலாகும் புகைப்படங்கள்! #PhotoAlbum

Next Post

பிக் பாஸ் ஷெரின் நடிகையின் அழகிய புகைப்படங்கள்…!!

Next Post

பிக் பாஸ் ஷெரின் நடிகையின் அழகிய புகைப்படங்கள்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

September 29, 2026 11:48 PM GMT+5:30

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை!

September 29, 2026 11:15 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version