பிப்ரவரி 14-ம் தேதியன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இருவரும் தமிழகம் வர இருக்கின்றனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் ராகுல்காந்தி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி சென்றார். வரும் 14-ம் தேதி நரேந்திர மோடி தமிழகம் வருவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை தொடக்கவிழா, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக அவர் தமிழகம் வர இருக்கிறார்.
இந்த நிலையில் பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி தமிழகத்தில் 2-ம் கட்ட பரப்புரையில் ஈடுபட உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். நாட்டின் இரு முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு ஒரே நாளில் வர இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.