தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்… அதிதி ராவ் ஹைதாரி

தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்… அதிதி ராவ் ஹைதாரி

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி.

இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த “Sufiyum Sujatayum” என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் the girl on the train படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை பிரணிதி சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அதிதி பாத் டப்பில் பயந்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *