88 வயதில் கிராம பஞ்சாயத்து தலைவராக கலக்கும் மூதாட்டி

88 வயதில் கிராம பஞ்சாயத்து தலைவராக கலக்கும் மூதாட்டி

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரான 88 வயதான மூதாட்டி பல்வேறு மொழிகளில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கலக்கி வருகிறார்.

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கயம்மிகனூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ூ சிக்கனகட்டி, கொடகவள்ளி, கொடகவள்ளி ஹட்டி, கோட்டாஹாளு, ஹொசஹள்ளி, அய்யனஹள்ளி ஆகிய கிராமங்கள் உள்ளன. சுமார் 7,500 பேர் வசிக்கும் இந்த கிராம பஞ்சாயத்து தலைவராக 88 வயதான மூதாட்டி திராக்‌ஷகாயணம்மா இருக்கிறார்.  வெறும் 7ம் வகுப்பு முடித்துள்ள பாட்டி சரளமாக ஆங்கிலம், கன்னடம் பேசுகிறார்.

சொந்த கிராமத்தில் தனிமையில் இருக்கும் மூதாட்டி  கிராம பஞ்சாயத்து தலைவியாக
தேர்ந்தெடுக்கப்பட்டபின் தாலுகா கிராம வளர்ச்சி அதிகாரியை கிராமத்திற்கு அழைத்து , கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்றார். கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சீரான சாலை, சுத்தமான குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்ய வேண்டும். எங்கள் கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த ஒதுக்கீடு செய்துள்ள நிதி எவ்வளவு, அந்த நிதியை கொண்டு என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என பல கேள்விகளை கிராம மக்கள் முன்னிலையில் கன்னடம் மற்றும் ஆங்கில ெமாழியில் எழுப்பினார். மூதாட்டியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரி தவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *