மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று திங்கள் கிழமை தேதி 08.03.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை துணிவுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
ரிஷபம் :
நீங்கள் எந்த விஷயத்திலும் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மற்றும் பணவிஷயத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை.
மிதுனம் :
குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் :
உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் வந்து சேரலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
சிம்மம் :
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.
கன்னி :
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம் :
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம் :
குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். மனதளவில் சோர்வாக காணப்படுவீர்கள்.
தனுசு :
உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
மகரம் :
புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்.
Read more – மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி…
கும்பம் :
உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகி வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம் :
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும்.




