பேரறிவாளன் வழக்கு விசாரணை இன்று, இந்த முறையும் ஒதுங்கி நிற்கப்போகிறதா மாநில அரசு – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் வழக்கு விசாரணை இன்று, இந்த முறையும் ஒதுங்கி நிற்கப்போகிறதா மாநில அரசு – தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் வழக்கில் கடந்த முறை போலவே இந்த முறையும் மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை :

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு விரும்பினால், ஆளுநர் விரும்பினால், இந்திய குடியரசு தலைவர் விரும்பினால் என்று அடுத்தடுத்து அவர்களின் விடுதலை புறம் தள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. இதுகுறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது :

Read more – திருவாரூரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்…

அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்து விட்டார். சட்ட ரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா? அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *