கடம்பூர் ராஜு கார் அருகே பட்டாசு வைத்த விவகாரம் : அமமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு

கடம்பூர் ராஜு கார் அருகே பட்டாசு வைத்த விவகாரம் : அமமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு

அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே பட்டாசு வைத்த விவகாரத்தில் அமமுக தொண்டர்கள் 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவில்பட்டி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாருக்கு வெற்றி பெறுவார்கள் என்று தமிழகமே உற்றுநோக்கி வருகிறது.

இந்தநிலையில், கடந்த 21 ம் தேதி கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மந்திதோப்பு சாலையில் அமமுக தொண்டர்கள் கார்த்திக் மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கார்வரும் பொழுது அதற்கு அடியில் வெடித்த வைத்ததாக கூறப்படுகிறது.

Read more – வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்.. அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது ?

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *