சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ஓடிடியில் ரிலீசா…?

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ஓடிடியில் ரிலீசா…?

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிடுவதா இல்லை திரையரங்கில் வெளியிடுவதா என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் டாக்டர் படம் ஓடிடியில் வெளியாவதற்கே அதிக பட்ச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘தளபதி 65’படத்தினையும் நெல்சன் இயக்கி வருவதால் டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த ‘டாக்டர்’ படம், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று (மே 14) வெளியாகும் எனக் கூறப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *