காம இச்சைக்கு ஆசைப்பட்டு மருமகளுடன் உடலுறவு கோபத்தில் தாத்தாவை கொன்ற பேரன் கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மருமகளைகூட விட்டு வைக்காத காமக்கொடூரனான தன் தாத்தாவை ஆத்திரத்தில் தூக்கி போட்டு மிதித்து கொன்றே விட்டான் அவரது சொந்த பேரன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேலப்பாளையூரில் வசித்து வந்த தவலிங்க சிவராயர்க்கு 71 வயதாகிறது. ஆரம்பம் முதல் இப்போது வரை விவசாயம்தான் பார்த்து வருகிறார். ஊர் பெரியவர் என்பதால், அங்குள்ள கோயிலில் தர்மகர்த்தாவாகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதியில் இருந்து தாத்தாவை காணோம். வெளியில் போவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது.
அதனால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, இறுதியில் அங்குள்ள புதரில் தாத்தா சடலமாக கிடந்தார். உடம்பெல்லாம் ரத்தக்காயத்துடன் இருந்த அவரை யாரோ அடித்து கொன்றதற்கான தடயங்களும் இருந்தன. இதையடுத்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் பறந்தது. விரைந்துவந்த போலீசாரும், சடலத்தை மீட்டனர். கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் சொல்லிவிட்டனர். இதன் காரணமாக, கடந்த 10 நாட்களாகவே, தீவிரமாக ஆக இறந்தவர்களை எடுத்துச் செல்லும் பாடை கட்டப்பட்டும், சடலத்தை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியும் மூடாமலேயே இருந்தன.
Read more : கள்ள காதலனோடு ஜாலியாக இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்…!!
இந்நிலையில் மோப்ப நாய் உதவியுடனும், தடவியல் நிபுணர்கள் வந்தனர். விசாரணைகள் ஆரம்பமானது.. தாத்தாவை யாராவது சொத்துக்காக கொன்றுவிட்டார்களோ என்ற கோணங்களில் விசாரணை நடந்தது. 40க்கும் மேற்பட்டோரை விசாரித்தும் பலன் கிட்டவில்லை.. அதனால், கடைசியாக தாத்தாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவரது பேரன், அதாவது மகன் வழி பேரன் ரஞ்சித் கடைசியாக பேசியது தெரியவந்தது.. இதையடுத்து ரஞ்சித்தை விசாரணைக்குள் கொண்டு வந்தது போலீஸ். இறுதியில் எல்லா உண்மையையும் கக்கிவிட்டார். “ஆமா.. தாத்தாவை நான் தான் கொன்றேன்.. 71 வயசாகியும் அவரது காமம் அடங்கல. பல பெண்களிடம் பழகி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். 45 வயதான என் அம்மாவிடமும் தகாத உறவு வைத்திருந்தார். இவர்கள் பல நேரங்களில் நெருக்கமாக இருந்தனர். இதை கண்ணெதிரிலேயே நான் பார்த்துவிட்டேன் அதனால் தான் கொன்றுவிட்டேன். அதனால்தான், நண்பர் செல்வகுமாருடன் சேர்ந்து தாத்தாவை அடித்து கொன்றேன்” என்று கூறியுள்ளார். போலீசார் ரஞ்சித்தையும், நண்பரையும் கைது செய்தனர்.. தாத்தாவை பேரனே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.