நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி

நாட்டை விட்டு வெளியேறினார் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார்.

அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த நிலையில் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில் அதிபர் அஷ்ரப் கனி, தஜிகிஸ்தான் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


காபூல் சுற்றி வளைக்கப்பட்டதால் விமானம் மூலம் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசுப்படைகள் சரணடைந்ததால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதி அளித்தாக கூறப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *