என்ன ரியோ இப்படி பண்ணிட்டாரு… சோகத்தில் முழ்கிய ரசிகர்கள்!

என்ன ரியோ இப்படி பண்ணிட்டாரு… சோகத்தில் முழ்கிய ரசிகர்கள்!

நடிகர் ரியோ நடித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில், திடீரென வெளியாகாமல் போனது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் – யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். பயணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கடைசி நேரத்தில் 40 லட்சம் ரூபாய் கடன் பணத்தை செட்டில் செய்யாத காரணத்தினால் திட்டமிட்டபடி இன்று படம் வெளியாகவில்லை. சிக்கல்களை தீர்த்துவிட்டுப் படத்தை அடுத்த வாரம் வெளியிட படக்குழு முயற்சி செய்வதாகத் தகவல் வெளியாகவுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *