‘விக்ரம்’ திரைப்படத்தில் லோகேஷ் வைத்த அதிரடி ட்விஸ்ட்!!

‘விக்ரம்’ திரைப்படத்தில் லோகேஷ் வைத்த அதிரடி ட்விஸ்ட்!!

கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பகத் பாசில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்த நிலையில் இந்த படத்தை பற்றிய மற்றுமொரு புதிய தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தின் இறுதியில் படத்தின் இரண்டாம் பாகம் தொடரும் என அறிவித்திருந்தார்.

அதேபோல தற்போது விக்ரம் படத்திலும் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார். தற்போது இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிற்கிறது. மேலும் பாபநாசம் 2, திரைப்படம் குறித்த பேச்சுவார்த்தையும் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *