Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ரீட் தேர்வில் மெகா மோசடி… புளூடூத் செருப்பு கொண்டு முறைகேடு… 5 பேர் கைது!

September 28, 2021

ராஜஸ்தானில் நடைபெற்ற ரீட் நுழைவு தேர்வில் ப்ளூடூத் செருப்பு கொண்டு முறைகேடு நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரீட் என்பது (Rajasthan Eligibility Exam for Teachers) ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் பணிகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். இது ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக ஆவதற்கு REET தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகளில் 31,000 பணியிடங்களுக்கான தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். மேலும் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இருந்தபோதும் ப்ளூடூத் செருப்பை பயன்படுத்தி சிலர் தேர்வு எழுத முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3,5,8ஆம் வகுப்புகளில் நுழைவுத்தேர்வை திணிக்க முயற்சி அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

மத்திய பல்கலைக்கழகத்தில் சேர இனி நுழைவுத்தேர்வா ? மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டம்..

“கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை” : AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுதே அறிவிப்பு

பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் அஜ்மீர் என்ற நபர் முதலில் கண்டறியப்பட்டார். அவரது காலணியில் ப்ளூடூத் கருவி இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாநிலம் முழுவதும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து இதேபோல மேலும் ப்ளூடூத் செருப்பு அணிந்திருந்த நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு அறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் இந்த 5 நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த ஒரு செருப்பின் விலை ரூ. 6 லட்சம் என்றும் இது போன்ற செருப்பினை 25 பேர் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இதனை விற்பனை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் செருப்பில் ஒரு ப்ளூடூத் சாதனம் இருந்ததாகவும், அவர்களின் காதுக்குள் ஒரு சிறிய சாதனம் இருந்தது என்றும் விளக்கினார். மேலும் தேர்வு அறைக்கு வெளியில் இருந்து யாரோ உதவியதாகவும் அவர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொள்ள இயலும். அந்த எண்ணில் மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருக்கும். அவர் அங்கிருந்து கேள்விகளுக்கு சரியான பதிலை கூறுவார். அது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் அவர் காதில் கேட்கும்.

இந்த சாதனத்தை யாரும் பார்க்க முடியாது அவ்வளவு சிறிய சாதனம் இது என்று கூறப்படுகிறது. ப்ளூடுத் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும் நிலையில் அடுத்த தேர்வில் தேர்வர்கள் செருப்பு அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரவுடிகளை ஒடுக்க ‘திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா’- தமிழக அரசு

Next Post

குட்கா-பான் மசாலாவிற்கு தடை நீட்டிக்கப்படுகிறது… காரணமான கொரோனா…

Next Post

குட்கா-பான் மசாலாவிற்கு தடை நீட்டிக்கப்படுகிறது… காரணமான கொரோனா…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version