தன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அப்டேட் கொடுத்த பிக் பாஸ் கவின்!!!

தன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அப்டேட் கொடுத்த பிக் பாஸ் கவின்!!!
கவின் தான் நடித்து கொண்டு இருக்கும் லிப்ட் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின்,பிறகு சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த கவினுக்கு திருப்பு முனையாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்பு நிறைய வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் ஒப்பந்தமான அடுத்த திரைப்படம் ‘லிப்ட்’. அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பே முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தில் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் மற்றும் காயத்ரி ரெட்டி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நேற்றுடன் தனது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக நடிகர் கவின் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

லிப்ட்’ படத்தின் பெரும்பாலான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதால் இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த உடன் படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *