Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இந்தியா ..

July 30, 2020
வறுமைக்கு எதிராக வென்றவற்றை இழக்கும் அபாயத்தில் இந்தியா உள்ளதாக இந்திய வளர்ச்சி மேம்படுத்தல் (India Development Update – IDU) வரைவில் உலக வங்கி எச்சரித்துள்ளது.

 பல குடும்பங்கள் கோவிட் -19 காரணமாக வருவாய் மற்றும் வேலை இழப்புகளை சந்தித்த நிலையில், மீண்டும் வறுமைக்கு தள்ளப்படக்கூடும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஊக்கப் பொதியின் நிதி தாக்கம் ரூ. 20 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இது போதாது என உலக வங்கி கூறுகிறது. ஜூன் 2020 வரை, நிலைமைகளை ஆய்ந்து தயாரிக்கப்பட்ட ஐ.டி.யூ அறிக்கை அரசுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

No Content Available

உலக வங்கியின் வரைவு அறிக்கை குறித்து கருத்துக்களையும் எதிர்வினைகளையும் அறிய தொடர்புடைய அமைச்சகங்களிடம் நிதி அமைச்சகம் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் அறிக்கையாக வெளியிடப்படும் எனவும் உலக வங்கியின் இந்திய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுதீப் மொசூம்தர் கூறியுள்ளார்.

அரசாங்கம் வழங்கக்கூடிய நிவாரணத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், வங்கி மூன்று சாத்தியமான அபாயங்களை அடையாளம் கண்டுள்ளது. பொது முடக்க நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தொடர்ந்தால் நிதித் துறையில் கூடுதல் இழப்புகளும் உலகளாவிய கண்ணோட்டத்தில் மேலும் சரிவு ஏற்படும் என கணித்துள்ளது.

சர்வதேச வறுமைக் கோட்டின் அடிப்படையில், வறுமை விகிதம் 21.6% இலிருந்து 13.4% ஆகக் குறைந்துவிட்டபோது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் கிடைத்த லாபங்களின் பின்நோக்கிய மாற்றத்தை இந்தியா காணும்.

“தேசிய அளவிலான கோவிட் -19 பொது முடக்கத்தைத் தொடர்ந்து முதற்கட்ட பகுப்பாய்வு வறுமைக்கு எதிரான இந்த ஆதாயங்கள் அழிக்கப்படும் என்று கூறுகிறது. வறுமைக்கு எதிராக இந்தியா பெற்ற கடின வெற்றிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளது, மேலும் ஏற்கனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் விரிவடையும்” எனவும் அது மேலும் கூறுகிறது. இந்தியாவின் பாதியளவிலான மக்கள் தொகையின் ‘நுகர்வு அளவுகள் ஆபத்தான முறையில் வறுமைக் கோட்டுக்கு நெருக்கமாக’ உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

“கோவிட் -19 விளைவாக வருமானம் மற்றும் வேலை இழப்புகள் காரணமாக இந்த குடும்பங்கள் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கக்கூடும்” என வரைவு குறிப்பிடுகிறது. இந்தியாவின் 90% தொழிலாளர்கள் முறைசாரா துறையில் இருப்பதன் பாதிப்புகளையும் இந்த அறிக்கை கூறுகிறது.

“இந்த தொழிலாளர்கள் சுருங்கிவரும் பொருளாதார நடவடிக்கைகள், அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட மூடல்கள் மற்றும் சமூக விலக்கம் தொடர்பான நெறிமுறைகள் ஆகியவற்றால் ஊதியம் மற்றும் வாழ்வாதார இழப்புகள் காரணமாக வறுமையில் விழும் அபாயம் உள்ளது. இந்தியாவில் ஒரு நிலையான சமூக பாதுகாப்பு அமைப்பு இல்லாததன் காரணமாக புலம்பெயர்ந்தோர் ஆழ்ந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்தோர் ஏழ்மை மற்றும் வறுமையின் பிடியும் சிக்கும் அபாயத்தில் உள்ளனர்” எனவும் வரைவு அறிக்கை கூறுகிறது.

ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றை ஏகாதிபத்திய நாடுகளின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரும் உலக வங்கி, இத்தகைய வரைவு அறிக்கையை கொடுப்பதன் காரணம் என்ன? அது இந்தியா மற்றும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு வரவிருக்கும் அபாயத்தை குறித்து எச்சரிப்பதுதான். ஆனாலும் அந்த எச்சரிக்கையில் நமது மக்கள் மேலும் வறுமையை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது. அரசியல் வெளியில் இதற்கான மாற்றுக்களோடு அமைப்புகள் போராட வேண்டும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அப்டேட் கொடுத்த பிக் பாஸ் கவின்!!!

Next Post

ராணுவ ஒப்பந்த ஊழல் வழக்கில் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டு சிறை

Next Post

ராணுவ ஒப்பந்த ஊழல் வழக்கில் ஜெயா ஜெட்லிக்கு 4 ஆண்டு சிறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version