Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தளபதியுடன் திரையில் மோதும் உலக நாயகன்?!

November 6, 2021

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பொருட் செலவில் இத்திரைப்படம் உருவாகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால், திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் அங்கு படமாக்க முடியாமல் படக்குழு பாதியிலேயே தாயகம் திரும்பியது.

ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்

’துருவ நட்சத்திரம்’ டிசம்பரில் ரிலீஸ்

மன்னிப்பு கேட்டார் ‘கோப்ரா’ பட இயக்குநர்

அதையடுத்து சென்னை, டெல்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதற்காக பிரம்மாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தளபதி, வில்லனுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்க படப்பிடிப்பு தொடங்கிய ஜார்ஜியாவுக்கு படக்குழு மீண்டும் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக விஜய் மீண்டும் ஜார்ஜியா பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதுபோன்று ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என்று பன்மொழிகளின் முன்ணனி நடிகர்கள் நடித்து வரும் திரைப்படம் இது.

கமல்ஹாசன் பிறந்தநாள் நெருங்குவதால் விக்ரம் படம் பற்றிய தகவல்கள் கூறுமாறு அவரது ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கையில் துப்பாக்கியுடன் தீயாக இருக்கும் போஸ்டரை வெளியிட்டு விக்ரமின் உலகை நாளை மாலை 6 மணிக்கு காணலாம் என தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விக்ரம் படம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று லோகேஷ் தெரிவித்துள்ளார். அதே 2022ம் ஆண்டு ஏப்ரலில் தான் விஜய்யின் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் படத்துடன் லோகேஷ் கனகராஜின் படம் சேர்ந்து வருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான பிகிலுடன், லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கைதி வெளியானது.

இந்த நிலையில் விக்ரம் படம் ஏப்ரல் மாதம் என்பதை உறுதி செய்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’

Next Post

மோகன்லால் படத்தின் ப்ரோமோஷனுக்காக தல அஜித்குமாரை பயன்படுத்திக் கொண்ட படக்குழுவினர்!!

Next Post

மோகன்லால் படத்தின் ப்ரோமோஷனுக்காக தல அஜித்குமாரை பயன்படுத்திக் கொண்ட படக்குழுவினர்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026

விஜய் பேச்சால் மீண்டும் விவாதமாகும் ‘மிசா’… MISA என்றால் என்ன? இந்திய ஜனநாயக வரலாற்றில் என்ன நடந்தது?

September 7, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version