தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 177 கோடி ரூபாய் மீட்பு… திகைத்து போன அதிகாரிகள்!!

தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத 177 கோடி ரூபாய் மீட்பு… திகைத்து போன அதிகாரிகள்!!


உத்தரபிரதேச தொழில் அதிபர் வீட்டில் இருந்து இதுவரை 177.45 கோடி மீட்கப்பட்டுள்ளது; வருமானவரித்துறை வரலாற்றில் ஒரே இடத்தில் மீட்கப்பட்ட அதிக ரொக்கம் என அதிகாரிகள் திகைப்பு.

டெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரபல தொழில் அதிபரான பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, குளிர்பான கிடங்கு, பெட்ரோல் நிலையத்தில் நேற்று முன்தினம் (23.12.2021) காலை 11 மணிக்கு திடீரென வருமானவரி த்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். பல மணி நேரமாக நீடித்து வரும் சோதனையில் இதுவரை 177.45 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக முதற்கட்டமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமான ரொக்கம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் “பான்மசாலா” பொருட்களை உரிய பில் இல்லாமல் போலியான இன்வாய்ஸ்கள் தாயரிக்கப்பட்டு அதன் மூலம் அனுப்பி வைத்து வருமானத்திற்கு அதிகமான பணம் சேர்த்தது தெரியவந்துள்ளது.

பியூஸ் ஜெயின்-க்கு சொந்தமான அனந்தபுரி இல்லத்தில் பணம் எண்ணும் இயந்திரங்கள் உதவியுடன் கைப்பற்றப்பட்ட பணத்தை கடந்த வியாழக்கிழமை பிற்பகல் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் எண்ண தொடங்கினர். இப்பணிகள் நேற்று நள்ளிரவு முடிந்த நிலையில் இதுவரை 177.45 கோடி ரூபாய் ரொக்கம் எண்ணப்பட்டுள்ளதாகவும்,ஜி.எஸ்.டி முறைகேடுகளும் நடந்துள்ளாதால் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் ஜி.எஸ்.டி அதிகாரிகளும் வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், வருமானவரித்துறை வரலாற்று ஒரே வீட்டில் இருந்து இவ்வளவு பணம் ரொக்கமாக நாங்கள் பறிமுதல் செய்தது இல்லை என அதிகாரிகள் திகைத்து உள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று நடைபெற்று வரும் நிலையில் இப்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட பணம் ஜி.எஸ்.டி விதிகளின் கீழ் பெட்டிகளில் வைக்கப்பட்டு துணை ராணுவ பாதுகாப்புடன் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்ற பணத்தில் பெரும் பகுதி 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

போலியான இன்வாய்ஸ்-கள் தயாரிக்கப்பட்டு “கணபதி ரோடு கேரியர்ஸ்” எனும் டிரன்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; இவை விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட டிரன்ஸ்போர்ட் உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவருக்கு பியூஸ் ஜெயின் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வழங்கப்பட்ட 1.01 கோடி ரூபாய் தொகையையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் உத்திரபிரதேசம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரபல தொழில் அதிபரின் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பல நூறு கோடி ரூபாய் ரொக்கம் கைப்படப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *