Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மறைந்த பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி!!

December 27, 2021

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகரும், துணை நடிகருமான மாணிக்க விநாயகம் அவர்களின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகரும்,நடிகருமான மாணிக்க விநாயகம்,தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.குறிப்பாக, தவசி,பருத்திவீரன்,வெயில்,சந்திரமுகி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. வேற்று மொழி பாடல்களையும் பாடியுள்ளார். மேலும்,திருடா திருடி, வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

கோட்சேவின் அஸ்தியை ஏன் கரைக்கவில்லை?

ஏழாமாண்டு நினைவுப் பேரணி!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – கோவை விரைகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இந்த நிலையில்,சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பு காரணமாக மாணிக்க விநாயகம் காலமானார். அவருக்கு வயது 78. இதனையடுத்து,மாணிக்க விநாயகம் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்தார்.இதுகுறித்து,நேற்று தனது ட்விட்டரில் முதல்வர் பதிவிட்டிருந்ததாவது:

“பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு.வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்”, என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில்,இன்று மாலை 4 மணியளவில் கோட்டூர் புறத்தில் உள்ள இடுகாட்டில் மாணிக்கம் விநாயகத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,மறைந்த மாணிக்கம் விநாயகம் அவர்களின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.அதன்படி, திருவான்மியூரில் உள்ள மாணிக்க விநாயகத்தின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்..அப்போது, முதல்வருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் உடனிருந்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி… பிரேமலதா பேட்டி

Next Post

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி!

Next Post

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version