இன்று மாலை வலிமை ட்ரைலர்?!– உற்சாகத்தில் ரசிகர்கள்!

இன்று மாலை வலிமை ட்ரைலர்?!– உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இன்னும் இந்த செய்தியினை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரண்டு வருடங்கள் நீண்ட காத்திருப்பு என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என்றே கூறலாம்.

இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நிலையில் விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சற்று முன் வெளியான தகவலின்படி இன்று ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. பிரபல திரைப்பட விமர்சகர்கள் சிலரும் இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளனர்.

இந்த படத்தின் டீஸர் மற்றும் பைக் சேஸிங் மேக்கிங் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த நிலையில், இன்று மாலை வலிமை படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. ஆனால், டிரைலர் குறித்து தயாரிப்பு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இதனை உறுதி செய்யும் விதமாக சோனி மியூசிக் சவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் கம்மிங் சூன் என்றும் பதிவிட்டுள்ளது. மொத்தமாக 3 நிமிடங்கள் பவர்ஃபுல் ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த டிரைலராக வலிமை ட்ரைலர் உள்ளதாகவும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *