துறை இல்லாமல் ’துறைபாபு’ செய்த காரியம் அம்பலம்

துறை இல்லாமல் ’துறைபாபு’ செய்த காரியம் அம்பலம்

சென்னை திருவொற்றியூரில் கூடுதல் விலைக்கு கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டிலை  விற்ற போலி  செய்தியாளரை (துறைபாபுவை) போலீசார்  கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூரில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, திருவொற்றியூர் ஆய்வாளர் காதர் மீரானுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தகவல் அறிந்து  காலடிப்பேட்டை ரயில்  நிலையம்  சென்ற போலீசார் கள்ளதனமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்பு, காவல் நிலையம் அழைத்து வந்து  விசாரணை செய்த போது  அவர், திருவொற்றியூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த துறைபாபு என தெரியவந்தது.

அவன், பாண்டிச்சேரியில் இருந்து தனியார் டிராவல்ஸ் பேருந்து மூலம் மது பாட்டில்களை கடத்தியும், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் வந்துள்ளான். மேலும்,  தான் பத்திரிகை செய்தியாளர் என்று போலீசாரிடம் கூறி உள்ளான்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவன், போலி செய்தியாளர் என தெரியவந்தது. இதனையடுத்து அவனிடமிருந்து இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *