ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Temple car, Sri Andal temple in Srivilliputtur, Tamil Nadu | Temple, Place  of worship, Incredible india

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிமாதம் வரும் ஆடிப்பூரத்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரத்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஜூலை 28ம் தேதி அதாவது இன்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூலை 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து ஆடிப்பூரத்தன்று (ஆகஸ்டு 1ம் தேதி) தேரோட்டத்திருவிழா நடைபெறவிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடைபெறுவதால் இதை மிகச் சிறப்பாக கொண்டாட ஆண்டாள் கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்டு 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு 13ம் தேதி பணிநாளாக செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *