சர்வதேச நாடுகள் ஆதரவு தர வேண்டும் தைவான் அதிபர் வேண்டுகோள்

சர்வதேச நாடுகள் ஆதரவு தர வேண்டும் தைவான் அதிபர் வேண்டுகோள்

போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.

Taiwan's president begins her second term with a call for unity

தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒருபகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.இந்நிலையில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றார். இதனால் கோபமடைந்த சீனா தைவான் வான் எல்லையில் போர்விமானங்களை அனுப்பி மிரட்டல் விடுத்தது. மேலும், நான்சி பெலோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதை தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங் வென் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தைவான் அரசும், ராணுவமும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. தேவையான பதிலடி நடவடிக்கைக்கும் தயாராகவே உள்ளோம். தைவானில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதை தடுக்க சர்வதேச ஆதரவை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *