₹75ஐ செலுத்தி இ-பைக்கை முன்பதிவு செய்யலாம்

₹75ஐ செலுத்தி இ-பைக்கை முன்பதிவு செய்யலாம்

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் ₹75க்கு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது.அதன்படி டார்க் மோட்டார்ஸ் கிராடோஸ் மாடலை முன்பதிவு செய்வோர் ₹75 மட்டும் செலுத்தினால் போதும். இந்த சலுகை ஆகஸ்டு 15 வரை மட்டுமே. அதன்பிறகு கட்டணம் வழக்கம்போல் ₹999 ஆக மாறிவிடும்.

Tork Kratos Streetfighter Goes On Sale in India at Rs 1.92 Lakhs

இந்த ஆண்டு ஜனவரி மாதம் டார்க் மோட்டார்ஸ் தனது கிராடோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.இந்த மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் கிராடோஸ் R என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ₹1,07,999 & ₹1,22,999 (எக்ஸ் ஷோரும் விலை). டார்க் மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டர்டு மணிக்கு 105கி.மீ வேகத்திலும், டார்க் மோட்டார் சைக்கிள் வேரியண்ட் மணிக்கு 100 கி.மீ வேகத்திலும் செல்லும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்கள் இந்தியாவில் பூனே, மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *