இரவு 7 மணிக்குமேல் போன் செய்யக்கூடாது ரிசர்வ் வங்கி உத்தரவு

இரவு 7 மணிக்குமேல் போன் செய்யக்கூடாது ரிசர்வ் வங்கி உத்தரவு

கடன் வாங்கியவர்களை  இரவு 7 மணிக்கு மேல் தொலைபேசியில் தொந்தரவு செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

RBI permits residents to make remittances to IFSCs under LRS

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த அணுகுமுறையை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவை முறையாக பின்பற்றப்படாததால் கூடுதலான உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

அதிகாலை கடன் வசூல் முகாம்- Dinamani

ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள உத்தரவில், “கடன் தவணை வசூலிப்பதலில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் வசூல் செய்யும் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

எவ்வகையிலும் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடாது. தொலைபேசி மிரட்டல்களை விடுவிக்கக்கூடாது. கடன் தவணையை செலுத்துமாறு இரவு 7 மணிக்கு பிறகும், காலை 8 மணிக்கு முன்பும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது. இந்த புதிய உத்தரவுகள், அனைத்து வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், அகில இந்திய நிதிநிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *