’விருமன்’ படத்தின் வெற்றிவிழா கார்த்தி நெகிழ்ச்சி

’விருமன்’ படத்தின் வெற்றிவிழா கார்த்தி நெகிழ்ச்சி

இயக்குநர் முத்தையா கண்ணீருடன்தான் கதை சொல்வார் என நடிகர் கார்த்தி விருமன் படத்தின் வெற்றிவிழாவில் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Karthi Mass Terrific Viruman Movie Trailer Here

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் சூரி நடிப்பில் வெளியான படம் விருமன். இப்படத்தை சூர்யா,ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆகஸ்டு 12ம் தேதி படம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

Official! Karthi's 'Viruman' gets an earlier release date - Tamil News -  IndiaGlitz.com

இதில், நடிகர் கார்த்தி பேசியதாவது: வெற்றி அடிக்கடி கிடைப்பதில்லை. கிடைக்கும் போது கொண்டாடிவிட வேண்டும். பெரிய குடும்பத்தின் வெற்றி இது. ஒவ்வொரு நாளும் முத்தையா கண்ணீருடன்தான் கதை சொல்வார். விட்டுக் கொடுத்து போவதில்தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது. கூட்டு குடும்பமாக வாழ மிகப்பெரிய சகிப்புத்தன்மை தேவை. நம்மைவிட அவர்கள் முக்கியம் என கருத வேண்டும். இந்தபடம் கிராமத்தில் ஓடும். நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால் நான் கேட்டே படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. குடும்பத்தின் தியாகத்தால்தான் நாங்கள் வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது. இவ்வாறு பேசினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *