அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆகஸ்டு 30ம் தேதி வருகை

அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஆகஸ்டு 30ம் தேதி வருகை

அமெரிக்க உயர்மட்ட குழு வரும் 30ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளது.

New America Announces 2019 Class of India-United States Public Interest  Technology Fellows

இந்தியா, அமெரிக்கா இடையே  அறிவியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்காக அமெரிக்க உயர்மட்ட குழு வரும் 30ம் தேதி (ஆகஸ்டு 30) இந்தியா வருகிறது.

அமெரிக்க செனட்டர் ஜான் ஓசோப் தலைமையிலான அந்த குழுவினர் வரும் 30ம் தேதி மும்பை வருகின்றனர். 8 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் அவர்கள், அடுத்த மாதம் 6ம் தேதி டெல்லியில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர். இந்த பயணம் குறித்து ஜான் ஓசோப் கூறுகையில், “இந்தியா,அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் செல்லும் அமெரிக்க குழுவுக்கு நான் தலைமை தாங்குகிறேன். இந்த பயணத்தின் போது இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர்களை சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்தார். முன்னதாக, சுதந்திர தின வாழ்த்து தெரிவித்திருந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் அவசியத்தையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *