திருப்பதி வஸ்திர சேவை வழக்கு பக்தருக்கு ₹50 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி வஸ்திர சேவை வழக்கு பக்தருக்கு ₹50 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பதி வஸ்திரசேவை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பக்தர் ஹரிபாஸ்கருக்கு ₹50 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

17 வருடம் காத்திருந்த பக்தர்.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.45 லட்சம்  அபராதம்..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வஸ்திர சேவை செய்து ஏழுமலையானை வழிபடமுடியும். இருப்பினும், இந்த சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஹரிபாஸ்கர் என்ற பக்தர் கடந்த 2006ம் ஆண்டு ₹12,500 செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். அவருக்கு 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திருப்பதியில் நடைபெறும் அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்பதிவு செய்த பக்தர்களின் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் அவர்கள் வேறு நாட்களில் விஐபி தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நிரல்.... |  Thirupathy Bramorchavam Program List

மேல் சாத்து வஸ்திர சேவைக்காக 17 ஆண்டுகள் காத்திருந்த ஹரிபாஸ்கர் இந்த அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு வருட காலத்திற்குள் மனுதாரர் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தரிசனத்திற்காக அவர் செலுத்திய தொகையை திருப்பித்தர வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  அதேசமயம் இதுபோன்று மற்ற பக்தர்களும் வழக்குத்தொடர வாய்ப்பு இருப்பதால், திருமலா திருப்பதி தேவஸ்தானம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *