5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை

5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Bengaluru to see more rains on Wednesday, Thursday | The News Minute

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால்  ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பத்தூர், வேலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. லட்சத்தீவு பகுதிகள், கேரள கடற்கரை பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *