இந்திய மாநிலங்களுக்கு இடையேயான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான கடைசி தகுதி சுற்றான இந்த போட்டியில் சிறப்பாக களம் காண வீரர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர்.ஆண்கள் பிரிவில் ஸ்ரீசங்கர், ஜெஸ்வின் ஆல்ட்ரின், அம்லான் போர்கோஹைன், தேஜிந்தர் பால்சிங், பிரவீன் சித்ரவேல் உள்பட முன்னணி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த தயாராக காத்திருக்கிறார்கள்.பெண்கள் பிரிவில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஜோதி, பாருல் சவுத்ரி, ஷைலி சிங் , அன்னு ராணி , சீமா புனியா, மன்பிரீத் கவுர் உள்ளிட்ட வீராங்கனைகள் களம் காணுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.