GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?

GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?

நடிகர் விஜயின் 68 வது படமான ‘கோட்’டை வெங்கட் பிரபு இயக்கி முடித்து விட்டார். சென்னை, கேரளா, ரஷ்யா எள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளது. பாடல் வெளியீட்டு விழாவிற்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆம். அது, ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை என்பதே.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு விரைவில் திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புஸ்சி ஆனந்த் கவனித்து வருகிறார். இந்நிலையில் கட்சியின் தொடக்க விழாவில் நேரடியாகப் பேசுவதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். அதுவரை எந்தவொரு பொது நிகழ்விலும் பேச வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளார். எனவே லியோ படத்தைப் போலவே கோட் படத்தின் வெற்றி விழாவின் போது ரசிகர்களை நேரடியாக சந்திக்கிறார் விஜய்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *