சென்னை மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் கனிமொழி, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கொரோனா லாக்டவுன் கால தடை உத்தரவு இருப்பதால் மெரீனா கடற்கரையில் சிறிது தூரம் மட்டும் மவுனமாக கையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். முதலில் அண்ணா நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.