கொரோனாவின் பாதிப்பு எப்போது அதிகமானதோ அப்பொழுதே மாஸ்க் நம் வாழ்வில் அத்தியாவசியமான பொருளாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் கருமையான வளையங்களை வீட்டில் இருந்தே சரி செய்வதற்கான வழிமுறைகள் இதோ உங்களுக்காக…
மஞ்சள் :
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. மாஸ்க்கினால் ஏற்படும் கருமை வளையங்களை சரி செய்யவும் இது உதவியாக உள்ளது. ஒரு சிட்டிகை மஞ்சளுடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து அதை கோடுகள் இருக்கும் இடத்தை சுற்றி அல்லது முகம் முழுவதும் தடவி சுமார் 20-30 நிமிடங்கள் கழித்து இதனை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்துவரும் போது முகத்தில் ஏற்படும் கருமை நீங்கக்கூடும்.
கற்றாழை :
சோற்றுக்கற்றாழை சதையினை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு முகம் முழுவதும் தடவ வேண்டும். மஞ்சளைப்போன்று இதனையும் 20 நிமிடங்கள் காயவைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதுவும் மாஸ்க் பயன்படுத்துவதால் முகத்தில் ஏற்படும் கருமை கோடுகளை அகற்ற உதவியாக இருக்கும்.
பாதாம் :
பாதாம் கொட்டைகளுடன் தயிர் அல்லது பால் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதனை முகம் முழுவதும் ஸ்கிரப் செய்து வரும் போது கருமை வளையங்கள் முற்றிலும் நீங்க உதவியாக இருக்கும்.