‘ஜிகர்தண்டா’ கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்

 ‘ஜிகர்தண்டா’ கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஜிகர்தண்டா 2 தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jigarthanda Full Movie Online in HD in Tamil on Hotstar UK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் ஆகிறது. இப்படம் 2014ம் ஆண்டு வெளியானது. இதில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரவுடியான பாபி சிம்ஹாவை ஹீரோவாக்குகிறேன் என்று கூறி இயக்குநராக அறிமுகம் ஆகும் சித்தார்த், ’அழுகுனி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக மாற்றி இருப்பார் . தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோபமடையும் பாபி சிம்ஹா, இயக்குநரான சித்தார்த்தை கொலை செய்ய முயற்சிப்பார். இறுதியில் கொலை செய்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. விருவிருப்பூட்டும் காட்சி அம்சத்துடன் மிகவும் நேர்த்தியாக கூறியிருப்பார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

Movie Review 'Jigarthanda': A film not to be missed

படம் வெளியாகி, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஜிகர்தண்டா 2 படம் தொடர்பான வீடியோ ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles