காந்தி

மறைந்து ஒளிந்த காந்தி

– தமிழ் கார்த்தி மின்விசிறியின் “டடக்…, டடக்” சத்தத்தில் சற்றுக் குறைவாகவே கைபேசியில் அழைப்பு ஒலி எழுந்தது. கண்களை மூடியவாறு நானும்  கைபேசியை வைத்த இடத்தில் தடவினேன். வைத்த இடத்தில் கைபேசி இல்லை. ஒரு பதட்டத்தில் கைபேசி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதோ  என எண்ணி கண்விழித்துத் தேடினேன். அந்த அழைப்பையும்  தவறவிட்டேன். அருகில் உள்ள மேசையில் இருந்து என் தலையணைக்கு அடியில்  கைபேசி இருந்ததைக் கவனித்தேன். யார்? என்ற கேள்வியோடு கைபேசியை திறந்தேன். அது… பாலுதான் என்னை…