நடிகை ரித்விகா கோட் சூட்டில் மாடர்னாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரித்விகா.

தொடர்ந்து, கபாலி உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தவாறே விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி அசத்தி வந்தார். இந்நிலையில், தற்போது கோட் சூட் அணிந்து படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். எல்ல கேரக்டர்ல நடிக்கவும் நான் ரெடி தான் சொல்றாங்க போல.





