முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சியை பத்மஸ்ரீ கமல்ஹாசன் கடந்த மாதம் 28 ந் தேதி தொடங்கி வைத்தார். “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் முதலமைச்சரின் 70 ஆண்டு பயண புகைப்பட கண்காட்சியை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.

பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சியை திமுக தொண்டர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படக் கண்காட்சியை ரசித்துப் பார்வையிட்டார். அங்கிருந்த புத்தகத்தில் தமது கருத்தினையும் பதிவு செய்தார். உடன் நடிகர் யோகிபாபுவும் வருகை தந்திருந்தார். புகைப்பட கண்காட்சி நாளையுடன் (மார்ச் 12) நிறைவடைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *