
தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகள் புதிய நேனோ LED உருவாக்கியுள்ளனர். இதை இன்னும் மேம்படுத்தும் போது நாம் தற்போது பயன்படுத்துவதை விட திறன் வாய்ந்த அதிகம் வெளிச்சமான LED கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒளி-உமிழும் டையோட்களுக்கான (எல்இடி) தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் வழக்கமான சிறிய, நேனோ அளவிலான வடிவமைப்புகளை விட தற்போது கண்டுபிடிக்கப்பட்ட LED 100 முதல் 1,000 மடங்கு பிரகாசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

வழக்கமான LED களுக்கு பயன்படுத்தும் அதே பொருட்கள் தான் இதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனால் அதன் வடிவமைப்பு தான் வித்தியாசத்தை தருகின்றது.
பல ஆண்டுகளாக LED செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், பல மாற்றங்களை அதில் கொண்டுவர ஆய்வாளர்கள் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். LED க்கு அதிக மின்சாரம் கொடுக்கப்படடால் அதிகம் பிரகாசமாக இருக்கும். ஆனால் சீக்கிரம் அதன் பிரகாசம் குறைந்துவிடும். இதை efficiency droop என அழைக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த பிரச்சினை மட்டும் இல்லையென்றால் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் முதல் வைரஸ்களை கொள்ளுவது வரை பல பயன்பாடுகளில் LEDக்களை நம்பிக்கையாக பயன்படுத்தலாம்.

எல்.ஈ.டி வடிவமைப்பு செயல்திறனைக் குறைக்கும் அதே வேளையில், ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் இந்த சிக்கலைத் தீர்க்கத் தொடங்கவில்லை. என்ஐஎஸ்டி மற்றும் பிற இடங்களில் உள்ள விஞ்ஞானிகள் லேப்-ஆன்-எ-சிப் தொழில்நுட்பம் போன்ற மிகச் சிறிய பயன்பாடுகளில் பயன்படுத்த மைக்ரோஸ்கோபிக் எல்இடியை உருவாக்குவதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
இவர்கள் மெல்லிய zinc oxide இழைகளில் இருந்து வெளிச்சத்தை உருவாக்க முயன்றனர். இந்த நுண்ணிய சீப்பு போன்ற வடிவமைப்பு 1 சென்டிமீட்டர் வரை பிரகாசமாக தெரிந்தது. ஆரம்பத்தில் 22மைக்ரோவாட்ஸ் மின்சாரம் அளித்தனர். தொடர்ந்து 20மைக்ரோவாட்ஸ் வரை LED தொடர்ந்து பிரகாசமாகிக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இந்த அளவில் உள்ள மற்ற LEDக்களை விட 100ல் இருந்து 1000ம் மடங்கு இவை பிரகாசமாக எரிவதாக தெரியவந்தது.
இதற்கு லேசரின் குணாதிசயங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு சிறிய அளவில் பிரகாசமான சக்தி வாய்ந்த லேசர் உருவாக்கப்பட்டால் வைரஸ்களை அளிப்பதற்கான வாய்ப்பும் அமையும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.




