தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி இன்று காலமானார்.
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர், ஓ.எஸ். மணியன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கலைச்செல்வி, உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக கலைச்செல்வி இன்று உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று, அங்கு இறுதிச் சடங்குகளை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்விமறைவுக்கு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.