Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

சந்தனபேழையில் ஓய்வு கொண்ட வர்த்தக சாம்ராஜ்ஜியம்.. பெற்றோருக்கு மத்தியில் எச்.வசந்தகுமார்

August 30, 2020
கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்த, காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகதீஸ்வரத்தத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமாருக்கு, கடந்த 10ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கவலைக்கிடமாகவே இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அல்வா விற்பனை கதை சொல்ல வருகிறார்….அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு

பாஜகவை தோற்கடிக்க புதிய வழி சொல்லும் ப.சிதம்பரம்…

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை..இவர்கள் தான் காரணம் – தலைமை தேர்தல் ஆணையம்

இதனையடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட வசந்தகுமார் உடல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு நேற்று வைக்கப்பட்டது. பிறகு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான அகதீஸ்வரம் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அவருடைய வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல், வசந்தகுமாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அவருடைய அப்பா, அம்மாவின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. சந்தனபேழையில் கிடத்தப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு அனைத்து இறுதி மரியாதையும் முறைப்படி செய்யப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கணினி குறுக்குவழி விசைகளின் பட்டியல்!!

Next Post

கான குயில் எஸ்.பி.பியின் கிறுக்கல்கள்..மகிழ்ச்சியில் திரையுலகம்

Next Post

கான குயில் எஸ்.பி.பியின் கிறுக்கல்கள்..மகிழ்ச்சியில் திரையுலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version