அல்வா விற்பனை கதை சொல்ல வருகிறார்….அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு

அல்வா விற்பனை கதை சொல்ல வருகிறார்….அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு
அல்வா விற்பனைப் போன்ற ஒரு கதையைச் சொல்ல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வருகிற 21-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார்.
மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவின் வேல் யாத்திரையில் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் முருகன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறும்போது, “அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்’’ என்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *