நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தை வாங்க அமேசான் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச்,வினோத் இயக்கு வரும் வலிமை படத்தில் அஜித் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கு முன் இதே கூட்டணி நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து பணியாற்றியது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் வலிமை மூலம் இணைந்தது இந்த கூட்டணி. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நடக்காததால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. 60% ஷூட்டிங் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், எப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் வலிமை படத்தை ஓடிடி தளமான அமேசான் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பொன்மகள் வந்தால் படத்தை வாங்கி வெளியிட்டது அமேசான். ஆனால் அது சொல்லிக்கொள்ளும் படி நல்ல வரவேற்ப்பை பெறவில்லை. அடுத்தடுத்து வெளியான பென்குயின், காக்டெயில் உள்ளிட்ட படங்களும் நெகட்டீவ் விமர்சனம் பெற்றதை அடுத்து, பெரிய படத்தை ரிலீஸ் செய்தால் தான் லாபம் பார்க்க முடியும் என அமேசான் திட்டமிட்டு வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படம் அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை வாங்க நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் தயாரிப்பு நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.