அமெரிக்க மக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடமுடியாது எனவும், இங்குள்ள மக்களுக்கு என்று தனிச்சுதந்திரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரேனாவின் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசும், அமெரிக்க மக்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அமெரிக்காவின் முன்னணி தொற்று நோயியல் வல்லுநரான அந்தோனி பவுசி வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் இதனை மறுத்த டொனால்ட் டிரம்ப், மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனாவினை ஒழித்து விடவும், மறைத்துவிடவும் முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்க் அணிவதால் பல்வேறு இதர பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. எனவே அமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது எனவும், இங்கு மக்களுக்கு தனிச்சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.